‘இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வட மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,374 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாண கல்வித் திணைக்களம் 14,133,164.86 ரூபாவையும், வரையறுக்கப்பட்ட மத்திய மாகாண கல்விச் சேவைகள் சேமநிதி, கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான கூட்டுறவு சங்கம் 200,000 ரூபாவையும், நோர்வூட் பிரதேச சபை தலைவர் திரு. கே.கே. ரவி 50,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

அவற்றுக்கான காசோலைகள் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகேவினால் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டன.

ஊவா மாகாண ஆளுநர் உள்ளிட்ட மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்புச் செய்த 11,612,217.02 ரூபாவுக்கான காசோலை ஆளுநர் ராஜா கொல்லுரேவினாலும், தென் மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்புச் செய்த 20,273,541.85 ரூபாவுக்கான காசோலை ஆளுநர் விலீ கமகேவினாலும், வட மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு செய்த 3,000,000 ரூபாவுக்கான காசோலை ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ல்ஸினாலும், கிழக்கு மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு செய்த 40,000,000 ரூபாவுக்கான காசோலை ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் தலைமை செயலாளர் பீ.வனிகசிங்கவினாலும், மேல் மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு செய்த 20,000,000 ரூபாவுக்கான காசோலை ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் டபிள்யு.டீ.எம்.ஜே ரொஷான் குணதிலகவினாலும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

Dial Textile Industries (Pvt) Ltd நிறுவனம் 3,000,000 ரூபாவையும், திரு. நீல் உமகிலிய 1,000,000 ரூபாவையும், Lion Vision for Sight Hospital Trust நிறுவனம் 10,000,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். இவற்றுக்கான காசோலைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

Sri Lanka – Australia – New Zealand Business Council (The Ceylon Chamber of Commerce) நிறுவனம் 500,000 ரூபாவையும் சட்டத்தரணி டீ.லக்சிறி மெண்டிஸ் 500,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,374,575,492.89 ரூபாவாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.