கறுப்பின மனிதரின் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை
அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர்கள் 53 பேருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
சந்தேகநபர்களை துறைமுக பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னிலை சோசலிச கட்சியினர் அமெரிக்க தூதரகம் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் முன்னெடுக்கவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
எனினும் அவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி நேற்று ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பொலிஸாரின் தலையீட்டினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்பட்டதுடன், முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ மற்றும் குமார் குணரட்ணம் உள்ளிட்ட 53 செயற்பாட்டாளர்கள் இதன்போது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை