கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 65 பேர் குணமடைந்து வைத்திசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 122 பேராக அதிகரித்துள்ளது.
மேலும் தொற்றுக்குள்ளான 725 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 859ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை