ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு பகிரங்க சவால் விடுத்தார் செஹான் சேமசிங்க

ஐக்கிய மக்கள் சக்தியினர், தங்களுக்கு பலம் கிடைத்து விட்டதாக தற்போது கூறிக்கொண்டு வருகிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இதனை பொதுத் தேர்தல் ஊடாக காண்பியுங்கள் என நாம் அவர்களிடத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுத் தேர்தலுக்கு இவர்கள் முகம் கொடுக்க வேண்டும். அப்போது மட்டுமே, மக்களால் நிராகரிக்கப்பட்ட எத்தனைப் பேர் அந்த கூட்டணியில் உள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.