சிறுவர் பாலியல் வன்கொடுமை – பேர்னபியில் ஒருவர் கைது

சிறுவர் பாலியல் வன்கொடுமை விசாரணை தொடர்பாக ஒரு வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இணையத்தில் சந்தித்த ஒரு பெண் குழந்தையை தாக்கியதாக குறித்த வாலிபர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளதுடன் பல குற்றச்சாட்டுகளை பேர்னபி மவுண்டீஸ் அறிவித்தது.

அந்த வாலிபர் அவளுடன் இணையத்தில் நட்பு கொண்டு அவளைச் சந்திக்க ஏற்பாடு செய்த பின்னர் அவளை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பொலிஸார் கூறுகிறார்கள்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரும் அவரது தாயும் மே 7ஆம் திகதி அன்று முறைப்பாட்டினை வழங்கிய நிலையில் சந்தேக நபர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.