கடற்படையினர் உட்பட 10 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 1869 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நேற்றைய தினம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 8 பேர் கடற்படையினர் என்றும் அதில் 7 பேர் கிளிநொச்சி – இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையத்திலும் ஒருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இருவரில் ஒருவர் கட்டாரிலிருந்தும் ஒருவர் மும்பையிலிருந்தும் நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 65 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, 736 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதோடு, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.