அக்கராயன் வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு- கிராமமட்ட அமைப்புக்கள் மகஜர்

அக்கராயன் வைத்தியசாலையை வட மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 15 கிராமமட்ட அமைப்புக்கள் இணைந்து மகஜர் கையளித்துள்ளன.

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்தே குறிதத் மகஜர்களை இன்று (வியாழக்கிழமை) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்னர்.

குறித்த வைத்தியசாலையை வடக்கு மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று அதுதொடர்பாக விசேட கூட்டமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதேச அமைப்புக்களால் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.