சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் சடலம் கண்டெடுப்பு!
கொழும்பு-7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் ஆணின் சடலமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லையெனவும் 60 முதல் 65 வயதிற்குட்பட்டவருடையதாக இருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை