தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கான சுதந்திரம் காணப்படவேண்டும் – லஷ்மன் கிரியல்ல

தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கான சுதந்திரம் காணப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேர்தலிற்காக அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் நடைமுறை சாத்தியமற்றவை.

தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கான சுதந்திரம் காணப்படவேண்டும்.  பேரணியினை நடத்தவேண்டும் என்றால் அதில் கலந்துகொள்ளவுள்ள 100 முதல் 500 பேரின் பெயர்களை சமர்ப்பிக்கவேண்டும் இது சாத்தியமற்ற விடயமாகும்.

தேர்தலை நடத்துவதில் அனுபவமற்றவர்கள் இந்த வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளனர். கட்சிகள் தமது கொள்கை விளக்கத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும்.

வாக்களிப்பு நிலையங்களில் சமூக விலகலை பின்பற்றினால் மக்கள் வரிசை பல கிலோமீற்றர் தூரத்திற்கு காணப்படும் என மகிந்த தேசப்பிரியவே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு 113 ஆசனங்கள் கிடைக்காது என்பது தெளிவான விடயமாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.