யாழில் கடலில் மிதந்துவந்த 57 கிலோ கஞ்சா!

யாழ்ப்பாணம், இளவாலை கடற்பரப்பில் கடலில் மிதந்துவந்த நிலையில் 57 கிலோ கஞ்சா கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இளவாலை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் மர்மப் பொருட்கள் மிதந்துவந்த நிலையில் அதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மூட்டைகளை சோதனையிட்டுள்ளனர். அப்போது அதற்குள் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கண்டெடுக்கப்பட்ட கஞ்சா மூட்டைகள் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த பொதிகளில் 57 கிலோ எடையுள்ள கஞ்சா உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.