வாக்களித்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி சிதைத்துள்ளார் – ஜே.வி.பி!
வாக்களித்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி சிதைத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது, நாட்டை ஆளும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, பல அமைச்சுகளில் அமைச்சராக சாமல் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவராக பசில் ராஜபக்ஷ உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குடும்ப ஆட்சி இடம்பெறுகின்றது.
இலங்கையில் தற்போது இவ்வாறான குடும்ப ஆட்சி இடம் பெறுகின்றது. இதனைத் தடுத்து ஜனநாயக ரீதியாக நாட்டை ஆட்சி செய்ய விரைவில் தேர்தலை நடத்த வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாகி விட்டன. இந்நிலையில் அவர் வாக்களித்த மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளார்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை