அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது – விமல்

அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது என மைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கை விமானநிலையத்தில் பிசிஆர் சோதனைக்கு தன்னை உட்படுத்த மறுத்தவர் அமெரிக்க இராஜதந்திரி இல்லை. இராஜதந்திர கடவுச்சீட்டுள்ள-அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த அந்த அதிகாரி இராஜதந்திரி இல்லை.

குறிப்பிட்ட நபர் அமெரிக்காவின் இந்தோ பசுப்பிற்கிற்கான கட்டளை தலைமையகத்தினை சேர்ந்தவர். இந்த தருணத்தில் அந்த நபர் வியன்னா பிரகடனத்தை தவறாக பயன்படுத்தி இலங்கைக்கு ஏன் வந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பிட்ட நபர் பிசிஆர் சோதனைக்கு தன்னை உட்படுத்த மறுத்தமை பாரதூரமான விடயமாகும். இது இடம்பெற அனுமதித்ததன் மூலம் அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது.

இந்த நடவடிக்கையால் இலங்கையின் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் முயற்சிகளிற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

குறிப்பிட்ட அதிகாரியின் வருகைக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளிவிவகார அமைச்சர் இதனை தெளிவுபடுத்தவேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.