24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 396 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,102லிருந்து 8,498 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று குணமடைந்தோர் 1,41,029லிருந்து 1,47,195ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,95,646ஆக உயர்வடைந்துள்ளதுடன் குணமடைந்தோர் எண்ணிக்கை 38,41,331ஆகும்.  அத்துடன்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,23,811ஆக  பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.