பெரஹர நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!

இம்முறை பெரஹர நிகழ்வுகளை பிரதான வணக்கஸ்தலங்கள் மற்றும் தேவாலயங்களில்  முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல் வழங்கியுள்ளார்.

இருப்பினும் குறித்த பெரஹர நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை என இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எமது பாரம்பரியம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்த ஆண்டு பெரஹெர நிகழ்வுகளை விகாரைகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவறுத்தியுள்ளார்.

கண்டி தலதா மாளிகை, கதிர்காமம் மற்றும் சப்ரகமுவ பகுதிகளில் இடம்பெறும் பெரஹெர நடவடிக்கைகள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.