தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்களுக்கிடையில் கலந்துரையாடல்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியில் 7 வேட்பாளர்கள், புளொட் அமைப்பில் இருவர் மற்றும் ரேலோவில் ஒருவருமாக கூட்டமைப்பின் 10 வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் அதற்கான பரப்புரைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, அதிக ஆசனங்களைப் பெறும் வகையில் செயற்படும் வழிவகைகளும் தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் உள்ளிட்ட சில கட்சியின் மூத்த செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை