நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திகை இன்று
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தெளிவூட்டும் வகையில் குறித்த தேர்தல் ஒத்திகை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 200 வாக்காளர்களைக் கொண்டு குறித்த தேர்தல் ஒத்திகை இன்று நடைபெறவுள்ளது.
நீர்கொழும்பு செபஸ்டியார் வித்தியாலயத்தில், இன்று காலை 10.00 மணி தொடக்கம் 12.30 மணிவரை, தேர்தல் ஒத்திகை நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த நிகழ்வில் சுகாதாரத்துறை அதிகாரிகள், நீர்கொழும்பு பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸார், கம்பஹா மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி, மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் ஜயலத் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை