வல்லைவெளியில் வெடிப்பு: இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை, பொலிஸார் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் வல்லை இராணுவ முகாமுக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் பொலிசாரின் விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகின்றது.
வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்று பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, முகாமினுள் தவறுதலான வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்து பொலிஸாரின் மேலதிக விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் அநாதரவாக கிடந்த பொதி ஒன்றினை நடைபயிற்சியில் ஈடுபட்ட இராணுவத்தின் அதிகாரி தரமுடையவர் அதனை எடுத்து பரிசோதித்த போது அது வெடித்ததில் அதிகாரி காயமடைந்த நிலையில் பலாலி இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை