யாழில் இருந்து தமிழகம் சென்ற வியாபாரிக்கு கொரோனோ தொற்று இல்லை

யாழ்.இணுவில் பகுதியில் நீண்ட காலமாக தங்கியிருந்த நிலையில், தமிழகம் திரும்பியவருக்கு கொரோனோ தொற்று இல்லையென மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இணுவில் பகுதியில் தங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த முதலாம் திகதி தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

குறித்த செய்தியின் அடிப்படையில் வட.மாகாண சுகாதார பணிமனையினர், வியாபாரியுடன் யாழில் தொடர்பினை பேணியவர்கள் என அடையாளம் காணப்பட்ட 13 பேரை தனிமைப்படுத்தி, கொரோனோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,  அவர்களுக்கும் தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்ற போதிலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையிலையே குறித்த வியாபாரிக்கு கொரொனோ தொற்று இல்லை என தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனோ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் திண்டுக்கல்லில் உள்ள தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.