48,000 ஆண்டுகளுக்கு முன்பு வில் மற்றும் அம்பு தொழில்நுட்பத்தின் ஆரம்ப சான்றுகள் இலங்கையில் இருந்துள்ளது – ஆய்வில் தகவல்
இலங்கையின் ஆதிமனிதர்கள் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளின் எலும்புகளிலிருந்து கருவிகளை வடிவமைத்து குரங்குகள் மற்றும் அணில்களை வேட்டையாட பயன்படுத்தினர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இது ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிற்கு வெளியே, இலங்கையில், வில் மற்றும் அம்பு பயன்பாட்டின் ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, ஃபா-ஹீன் லீனா குகையில் காணப்பட்ட குரங்கு மற்றும் அணில் எலும்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டனர்.
இந்தக் குகை தெற்காசியாவில் ஹோமோ சேபியன்களின் ஆரம்பகால புதைபடிவ தோற்றத்தின் இடமாகும். 4,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் மனிதர்கள் இப்பகுதியை ஆக்கிரமித்தனர்.
இந்நிலையில் குறித்த குகையில் உள்ள சில எலும்புகள் கருவிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே மழைக்காடுகளில் விரைவாக நகரும் இத்தகைய சிறிய விலங்குகளை நம் ஆரம்பகால மூதாதையர்களினால் எவ்வாறு வெற்றிகரமாக வேட்டையாட முடிந்தது என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
“புள்ளிகளில் உள்ள எலும்பு முறிவுகள் அதிக சக்தி வாய்ந்த தாக்கத்தின் மூலம் சேதத்தைக் குறிக்கின்றன – பொதுவாக விலங்குகளின் வில் மற்றும் அம்பு வேட்டையின் பயன்பாட்டில் இது காணப்படுகிறது” என கிரிஃபித் பல்கலைக்கழகத்தில் தடயவியல் மற்றும் தொல்பொருளியல் மூத்த விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இவை 32,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசியாவில் இதே போன்ற கண்டுபிடிப்புகளை விட மிக பழமையானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த கண்டுபிடிப்பு சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் காணப்பட்ட வில் மற்றும் அம்பு தொழில்நுட்பத்தின் ஆதாரங்களை காட்டுவதாகவும் ஆய்வின் துணை ஆசிரியரும், மனித வரலாற்றின் அறிவியல் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டில் தொல்பொருள் துறையில் நிலையான ஐசோடப் ஆய்வகத்தின் குழுத் தலைவருமான பெட்ரிக் ரொபேர்ட்ஸ் கூறியுள்ளார்.
சில ஆராய்ச்சியாளர்கள் இந்த தொழில்நுட்பம் ஐரோப்பாவிற்கு முன்னர் வந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக சமூக அறிவியல் பாடசாலையின் மூத்த ஆராய்ச்சியாளரான ரொபேர்ட்ஸ் உலகில் எங்கும் இல்லாத தெளிவான சான்றுகள் தற்போது 64,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் உள்ளன எனக் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை