“IDFC First Bharat” என்ற நிதி நிறுவனத்தின் வசூல் வேட்டை…
அனுப்புநர்,
தர்ஷினி பிரியா
பூங்கா நகர், இராஜகோபாலபுரம்,
புதுக்கோட்டை – 622003
பெறுநர்,
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
புதுக்கோட்டை.
பொருள்: மகளிர் குழு வசூல் தொடர்பாக
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம், நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் பூங்கா
நகரில் வசித்து வருகிறேன்.
IDFC First Bharat என்ற நிதி நிறுவனம், மகளிர் குழு என்ற பெயரில் வாரம் தோறும் திங்கள்
கிழமை வசூல் செய்து வருகிறது.
கடன் தவணைகளையும் செலுத்த கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை
நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்று
எடுத்து கூறியும் ஏற்க்க மறுத்து, எங்களுக்கு எந்த ஒரு உத்தரவும் வரவில்லை என்று கூறுகிறார்கள்.
தனியார் பள்ளியில் பணிபுரியம் நான் பாதி சம்பளம் தான் தற்சமயம் வாங்கி வருகிறேன்.
என்னால் தற்சமயம் வாரம் தோறும் திங்கள் கிழமை அன்று பணத்தை கட்ட முடியவில்லை. IDFC
First Bharat" என்ற நிதி நிறுவனம், வாரம் தோறும் வீட்டின்
வாசலில் நின்றுகொண்டு பணம் வாங்கும் வரை போக மறுக்கிறார்கள். கடன் வாங்கி கடன்
செலுத்தும் நிலையில் உள்ளேன், வட்டியும் அதிகம் கேட்கிறார்கள். இவர்கள் செய்யும் செயல்கள்
அனைத்தும் தற்கொலைக்கு துண்டுவதாக உள்ளது. என்னை போல் இங்கு 30-க்கும் அதிகமான
பெண்கள் பாதித்து உள்ளார்கள்.
IDFC First Bharat, Opposite to New Municipality Office, Pudukkottai-622001.
இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
இப்படிக்கு,
தர்ஷனி பிரியா
கருத்துக்களேதுமில்லை