எரிபொருள் விலை இந்த ஆண்டு எந்தவொரு சூழ்நிலையிலும் அதிகரிக்கப்படாது – மஹிந்த அமரவீர
வீழ்ச்சியடைந்த உலகளாவிய எரிபொருள் விலை, இந்த ஆண்டு இறுதிக்குள் கணிசமான அளவு மீண்டும் அதிகரிக்கும் என நம்புவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை இந்த ஆண்டு எந்தவொரு சூழ்நிலையிலும் அதிகரிக்கப்படாது என உறுதியளித்தார்.
மேலும் நெருக்கடிகாலத்தில் அரசாங்கம் வருமானத்தை இழந்திருந்தாலும் இழந்தவற்றினை மீட்க தொடர்ந்தும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கைகளை முன்வைத்தபோதும் அதில் எவ்வித மாற்றங்களை மேற்கொள்ளாதமையினால் அரசாங்கம் எரிபொருள் மூலம் வருமானத்தை ஈட்டியது.
இருப்பினும் அந்த நேரத்தில் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்திருந்தால், இப்போது விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எரிபொருள் விலையால் ஏற்படும் அனைத்து இலாபங்களும் அரச நிதிக்கு ஒதுக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை