வழமைக்கு திரும்ப தயாராகும் மெக்ஸிகோ சிட்டி!
மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில், கார் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் நீக்கப்படுகின்றது.
அத்துடன், 340,000 தொழிற்சாலை தொழிலாளர்கள் கடுமையான சுகாதார நிலைமைகளின் கீழ் பணிக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, வீதிச் சந்தைகள், வணிக வாளகங்கள், உணவகங்கள் மற்றும் தேவாலயங்கள் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்படலாம்.
ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் பொருளாதாரத்தை மீண்டும் செயற்படுத்த ஆர்வமாக உள்ளார். இந்தநிலையிலேயே மெக்ஸிகோ சிட்டி மேயர் கிளாடியா ஷெய்ன்பாம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மெக்ஸிகோவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் வேலைகளை இழந்துள்ளனர். நடப்பு ஆண்டு பொருளாதாரம் 8.8 சதவீதம் சுருங்கும் கணிக்கப்பட்டுள்ளது.
5,222 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 504 புதிய இறப்புகளுடன் சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இப்போது உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றுகள் 139,196 மற்றும் மொத்த இறப்புகள் கிட்டத்தட்ட 16,450ஆகும்.
கருத்துக்களேதுமில்லை