சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து யாழில் தேர்தல் ஒத்திகை
யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டு தேர்தல் முன்னாயத்த ஒத்திகை தற்போது இடம்பெற்று வருகின்றது.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்பதை ஆராய்வதற்காக குறித்த தேர்தல் ஒத்திகை இடம்பெறுகின்றது.
அதற்கமைய யாழ்ப்பாணம், நாவாந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமான தேர்தல் ஒத்திகை நன்பகல் 12 மணிவரை நடைபெறவுள்ளது.
இதன்போது சமூக இடைவெளியை பேணி, கைகள் சுத்தம் செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த தேர்தல் ஒத்திகையின்போது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்னாயக, யாழ். மாவட்ட தேர்தல் அத்தியச்சகர் க.மகேச, யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், பொலிஸார், சுகாதார துறை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை