கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளைச் சம்பவம்- சந்தேகநபரை கைது செய்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வத அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி தும்முல்ல பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி பயணித்த டிபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதுடன், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை