வரணிஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம், வரணி வடக்கு – தம்பான் கும்பிட்டான்குள பிள்ளையார் ஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் – சங்கானையை சேர்ந்தவரே நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த ஆலயத்தின் சி.சி.டீ.வி காட்சிகளை அடிப்படையாக வைத்தே சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரிடமிருந்து திருட்டுப்போனதாக கூறப்படும் சங்கிலி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி ஆலயத்தில் இருந்த ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 45, 000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.