தேர்தல் நடவடிக்கை: திறைசேரியிடம் 75 கோடி ரூபாயை கோரும் தேர்தல் ஆணைக்குழு

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்டப் பணிகளை முன்னெடுப்பதற்காக 75 கோடி ரூபாயைப் பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ளது.

மேலும், தேர்தலுக்காக வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகத் திணைக்களத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, 575 கோடி ரூபாய் நிதியைச் செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என தேர்தல் ஆணைக்குழு அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத்தேர்தலை, சுகாதார வழிகாட்டு முறைகளின் கீழ் நடத்துவதில் உள்ள சிரமங்களைக் கண்டறிவதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு மாதிரி வாக்கெடுப்புகளை  தற்போது ஒவ்வொரு கட்டமாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.