இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன- ஞானசார தேரர்
இலங்கையில் சுமார் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (சனிக்கிழமை) சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை கொண்ட தப்லிக் ஜமாஅத் வாதம், வகாப் வாதம், சலஃபி வாதம், ஜமாஅத்தே இஸ்லாம் ஆகிய பிரதான 4 குழுக்கள் காணப்படுகின்றது.
அதாவது பல்வேறு பெயர்களில் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் அதற்கு கோதுமை மாவே பயன்படுத்தப்படும். அதேபோன்று இந்த குழுக்களும் வெவ்வேறு பெயர்களில் ஒன்றுகூடி செயற்பட்டு வருகின்றன.
அதேபோன்றே சஹ்ரான் என்ற நபர் உருவாவதற்கும் அவர் ஒரு குழுவை உருவாக்குவதற்கும் ஜமாஅத்தே இஸ்லாம்வாதம் என்ற ஒன்றே அடிப்படையாக இருந்துள்ளது.
மேலும் கடவுளுக்காக எந்தவொரு தருணத்திலும் தற்கொலை செய்து கொள்ள அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். அதேபோன்று ஜமாஅத்தே இஸ்லாம் கொள்கை கொண்டவர்கள் ஜிகாத்தை (யுத்தம்) பரப்புகின்றனர்.
பேருவளையில் உள்ள ஜாமியா நளீமியா இஸ்லாமிய நிறுவனம் இவ்வாறான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இதில் கல்வி கற்பவர்கள் உயர்தர கல்விக்காக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவ்வாறு கல்வி கற்றவர்கள் தற்போது தொழிலுக்காக இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் மிக்க பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறான நான்காயிரம் பேர் உள்ளனர். அவர்களில் சிலர் அரச இஸ்லாமிய பாட புத்தகத்தை தயாரிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
அதற்கமைய 9ம் வகுப்பு 12 மற்றும் 13ம் வகுப்பு இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் எகிப்தின் இவான் முஸ்லிம் அமைப்பின் தலைவரின் கற்கை நெறிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதுன.
இதேவேளை 13ம் தர இஸ்லாமிய ஆசிரியர் வழிகாட்டி புத்தகத்தில் 43, 63, 109 மற்றும் 123ஆம் பக்கங்களில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை