மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
நாட்டிலுள்ள இரத்த வாங்கிகளில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தள்ளாடி படை முகாமில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு, கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.ஏ.ஐ.ஜே.பண்டாரவின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த இரத்ததான முகாம் இடம்பெற்றது.
இதன்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை தந்திருந்தனர்.
தள்ளாடி படை முகாமில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் சுமார் 150 இராணுவத்தினர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.
மேலும் இரத்ததானம் செய்ய கலந்துகொண்ட இராணுவ வீரர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை