மாணவர்களுக்கு கல்வியமைச்சு புதிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போசாக்கு உணவு நிறைந்த உலர் உணவு பொதியொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சுற்றுநிருபத்தில் என்.எச்.எம் சித்ரானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “ பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பித்ததும் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்படும்.

அத்துடன், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், வலயக்கல்வி பணிமனைகள் ஊடாக மாணவர்களின் வீடுகளுக்கே குறித்த உலர் உணவு பொதி அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதேவேளை இவ்வருடம் நடாத்தப்படவிருந்த அனைத்திலங்கை பாடசாலை விளையாட்டுப்போட்டி மேலும் பாடசாலை விளையாட்டுச்சங்கத்தினால் நடாத்தப்படவிருந்த மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் யாவும் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன” எனவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.