பரந்தனில் சந்தேகத்திற்கிடமான வெடி பொருள் பாதுகாப்பாக செயலிழப்பு

பரந்தன், முல்லைத்தீவு வீதியில் வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.

பரந்தன் முல்லை வீதியில் உள்ள இராணுவ முகாம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதோடு, குறித்த பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தினர்.

பின்னர், குறித்த வெடி பொருள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் எவ்வாறு வெடிபொருள் வைக்கப்பட்டிருக்கும் என்ற பல்கோண விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.