சந்திரிக்காவுக்கும் மங்களவுக்கும் இடையில் சந்திப்பு

முன்னாள் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு சந்திரிகாவின் அத்தனகல்ல இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் இருந்து விலகுவதாகச் சில தினங்களுக்கு முன்னர் மங்கள அறிவித்திருந்த நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த இருவரும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடி இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.