நாவற்குழியில் சிறுமி மீது கத்திக்குத்து

சாவகச்சேரி பகுதியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு, கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது. இதில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.

அந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைக்கலப்பாக மாறியது. இதன்போது  ஒருவர், பிறிதொருவரை கத்தியால் குத்த முனைந்தபோது, அங்கிருந்த சிறுமியின் கழுத்து பகுதியில் கத்தி குத்தியுள்ளது.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.