நேர்மையான முறையில் தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட வேண்டும் – ரிஷாட்

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்சி ஒன்றின் தலைவராக அதுவும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவராக இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “  நாட்டிலே கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடான, அநீதியான தேர்தலை இல்லாமலாக்கி, நீதியும் நியாயமும் வாக்கெடுப்பில் மேலோங்க வேண்டும் என்பதற்காகவே, 2015 ஆம் ஆண்டு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.

அதன் பிரதிபலனாக உருவாக்கப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, இம்முறை பொதுத்தேர்தலில் அதன் நோக்கத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டும். ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.