பொதுத் தேர்தல்: ஏராளமான புதிய முகங்களை களமிறங்கியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக கட்சி ஏராளமான புதிய முகங்களை களமிறங்கியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் மாவட்ட முகாமையாளருடனான சந்திப்பில் பேசிய ரணில் விக்ரமசிங்க, தமது கட்சி நாட்டின் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து மட்டுமல்லாமல் அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும் செயற்பட்டு வருகின்றது என கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தூக்கி எறிய விரும்புவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்தத் தேர்தல் ஐ.தே.க.வே அதிக எண்ணிக்கையிலான புதிய வேட்பாளர்களைக் கொண்ட கட்சியாக காணப்படுகின்றது. எனவே புதியவர்களை தேர்ந்தெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களின் அடங்கிய ஆரோக்கியமான கலவையாகும். அவர்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது பொதுமக்கள் ஏற்கனவே நம்பிக்கையை இழந்துவிட்டார்கள், மேலும் அவர்களது தரப்பினர் மீதான நம்பிக்கையும் தற்போது மக்களுக்கு இல்லாதுப்போய்விட்டது.

நாட்டின் மிக நீண்டகால அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி மற்றும் தோல்வி என இரண்டையும் சந்தித்துள்ளது. மேலும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

தற்போது, நாடு பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது, அவற்றிக்கு தீர்வு காணும் ஒரே அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே. குறிப்பாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் அதேவேளை அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை நாம் முன்வைப்போம்” என்றும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.