மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, முன்னெடுக்கப்பட்ட மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் இடம்பெறாது என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, சுகாதார பிரிவினருடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பட்டுக்கு அமைய மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் மருந்துகளை விநியோகிப்பதில் சிரமம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மருந்துகளை தொடர்ந்தும் விநியோகம் செய்யுமாறு சுகாதார பிரிவினரும் நுகர்வோரும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அதற்கமைய எதிர்காலத்தில் புதியதொரு முறைமையின் கீழ் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி விசேட செயலணியின் கோரிக்கைக்கு அமைய அரச வைத்தியசாலைகளில் இருந்தும் ஒசுசலைகளில் இருந்தும் மருந்து பொருட்களைப் பெற்று அவற்றை மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை தபால் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.