தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை
தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை அரசியல்வாதிகள் உறுதி செய்யவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாது என தெரிவிக்கும் சட்டபூர்வமான ஆவணத்தில் கைச்சாத்திடவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் உள்ளது என்பதால், அரசாங்கம் அவர்களுக்கு அவசியமான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் போக்குவரத்து வசதிகளையும் வழங்கவேண்டும் எனவும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் ஒத்திகைகள் நேற்று நாட்டின் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை