காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிரிழப்பு

யாழ்.கோப்பாய் கைதடி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கடும் காற்று வீசியமையால் அதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து (வயது 80) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.

தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த வெள்ளிக்கிழமை கோப்பாய் பகுதியில் இருந்து கைதடி நோக்கி பயணித்துள்ளார்.

இதன்போது கோப்பாய் – கைதடி பாலத்தடியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வீசிய கடும் காற்றினால் மோட்டார் சைக்கிள் நிலை குலைந்துள்ளது. அதன்போது, பின்னால் இருந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு பாலத்துடன் மோதுண்டார்.

அதனை தொடர்ந்து முதியவர் அங்கிருந்து சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.