153 இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்பினர்

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்து கொரோனா தொற்று காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு செல்ல முடியாமல் இருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் 153 பேர்  இந்தியா நோக்கி பயணித்துள்ளனர்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை 10.15 மணியளவில் இந்தியா நோக்கி பயணித்துள்ளனர்.

குறித்த விமானம் முதலில் கொச்சின் விமான நிலையத்தை சென்றடைந்து, அங்கிருந்து மீண்டும் பெங்ளூர் விமான நிலையத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தற்காலிக விடுதிகளில் 7 நாட்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.

அதன்பின்னர் அவர்களது வீடுகளில் 7 நாட்கள் சுய தனிமைப்படுலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.