விக்னேஸ்வரன் மக்களிடம் கையேந்தாமல் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு ஆனந்த சங்கரி அழைப்பு!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்வாறு  விக்னேஸ்வரன்  தனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றேன் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் அமைந்துள்ள  தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை)  நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”   எங்கள் கட்சிக்கு இதுவரை யாரும் நிதி உதவி செய்யவில்லை யாராவது நிதியுதவி தந்திருந்தால் அதை எங்களுக்கு பகிரங்க படுத்துங்கள். எந்த கட்சிக்கும் தற்பொழுது நிதி உதவி தேவைப்படுகின்றது அதைவிட விக்னேஸ்வரன் அவர்கள் தமது கட்சிக்காக நீதிகோரி இருக்கின்றனர்.

நாங்கள் நடத்தப் போவது சாத்வீகப் போராட்டம். எங்களுக்கும்  நிதி தேவையாக உள்ளது நான் இல்லை என்று சொல்லவில்லை. சி வி விக்னேஸ்வரன் அவர்களுக்கு என்னுடைய ஆலோசனை இது. இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எனது கட்சிக்காக நான் விக்னேஸ்வரனுக்கு   அழைப்பை விடுகின்றேன் இப்பொழுது  வந்தாலும்   எமது கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும்.

அதைவிடுத்து சி . வி. விக்னேஸ்வரன் அவர்களை நீங்கள் தேவையில்லாமல் பணத்தினை சேகரித்து உங்கள் கட்சியில் மானத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் அவர் கட்சியில் இருந்து பொதுத் தேர்தலில் களமிறங்கும் யாராவது ஆக இங்கு வந்து இருந்தால் அவர்களுக்கு எங்களுடைய ஆதரவினை நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.