மைத்திரியின் அடுத்த நகர்வு தொடர்பாக அவதானமாக இருக்கின்றோம்- பொதுஜன பெரமுன

தாமரை மொட்டுவின் உதவியுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முயற்சிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நகர்வுகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பியகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கமே நாட்டிற்கு பல தீங்குகளை செய்துள்ளது.

அதாவது இலங்கை வரலாற்றில் நல்லாட்சி அரசாங்கம்தான் இவ்வாறு அதிகளவு தீங்குகளை செய்துள்ளது

நல்லாட்சியின் சகாப்தம் இலங்கையின் இருண்ட சகாப்தமாக மாறியுள்ளது.

அன்று நாங்கள் மொட்டினை உருவாக்கும்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வீதி வீதியாகச் சென்று அழைக்கின்றோம் என்றும் மொட்டு உருவாகினால் பார்ப்போம் என்றும் தெரிவித்துவிட்டு தற்போது மொட்டுச் சின்னதில் போட்டியிடுகிறார்.

அவர் மொட்டு கட்சியில் மறைந்து நாடாளுமன்றத்திற்கு செல்ல முயற்சிக்கின்றார்.  எனவே மைத்திரிபாலவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.