ஊரடங்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் – ஜனாதிபதியின் உத்தரவு
இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையிலும் கொரோனா வைரஸ் சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 3 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. தற்போதும் இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளாரென்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை