கைத்தறி மற்றும் பற்றிக் துணிகளின் இறக்குமதிக்கு தடை!
கைத்தறி மற்றும் பற்றிக் துணிகள் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.
இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்கு ஈர்ப்பதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
துணி மற்றும் ஆடை தொழிற்துறையினர் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படுகின்ற துணிகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற ஆடைகளுக்குப் பதிலாக, உள்நாட்டு துணிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற ஆடைகளின் சந்தை வாய்ப்புக் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இதன்மூலம் பாரிய அளவில் அந்திய செலாவணியை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலை மற்றும் ஏனைய சீருடைகளுக்காக உற்பத்தி செய்யப்படுகின்ற துணிகளின் தரம் சிறந்ததாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இது தொடர்பில் ஆராய்வதற்கு மேற்பார்வைக் குழுவொன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை