யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி புத்தளத்தில் சடலமாகக் கண்டெடுப்பு
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் – மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை வடக்கைச் சேர்ந்த நமசிவாயம் டயஸ் (26-வயது) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை