யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம்  நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று  (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த தீயணைப்பு வாகனத்திற்ன் முன் பகுதி சில்லு திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் வீதியை விட்டு விலகிய வாகனம்  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில்   அரியரட்ணம் சகாயராஜா எனும் 37 வயதுடைய தீயணைப்பு வீரர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.