வடக்கில் எத்தனை விதவைகள் உள்ளனர்? மக்கள் பிரதிநிதிகளே தரவு தரவேண்டும்! என்கிறார் உமாசந்திரபிரகாஷ்
வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்பு எந்தனை விதவைகள் இருக்கின்றார்கள் என மக்கள் ஆணை பெற்றவர்கள்தான் சரியான தரவுகளை கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
87 ஆயிரம் பேர் இருக்கின்றார்கள் என இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா என உமாச்சந்திரா பிரகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உமாச்சந்திரா பிரகாசிடம் வடகிழக்கில் இருக்கும் விதவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கும் போதே உமாச்சந்திரா பிரகாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
யுத்தம் முடிவடைந்து இவ்வளவு நாள்கள் கடந்துவிட்டது வடக்கு கிழக்கில் விதவைகள் 87 ஆயிரமாக இருக்குமா என்பது ஒரு கேள்வி.
அதில் எந்தனை பேர் இறந்துள்ளார்கள், எத்தனை பேர் தொடர்ந்து தங்களுடைய குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி இருக்கின்றது.
தற்போது 10 வருடம் கடந்துவிட்டதற்கு பிறகு எத்தனை பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று ஒரு கேள்வியும் இருக்கின்றது.
ஏன் என்று சொன்னார் உங்களுக்கு தெரியும் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பிறகு எங்களுடைய மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளாக புற்று நோய், சிறுநீரக நோய் மற்றும் இருதய வருத்தம் இவ்வாறான நோய்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின் றது.
இதற்கு மேலதிகமாக முள்ளந்தண்டு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டுள்ளார்கள்.
நாங்கள் அற்று சென்ற ஒரு கிராமத்திலே 22 வயது இளைஞன் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கின்றான்.
யுத்தம் நிறைவடையும் போது அவருக்கு 12 வயது, இந்த கணக்கெடுப்புகள் எல்லாம் நீங்கள் சொல்லுகின்ற கணக்கெடுப்புகளில் உள்வாங்கட்டுள்ளதா.
இன்னுமொரு விடயம் இந்த 10 வருடத்தில் மக்கள் ஆனை பெற்றவர்கள்தான் அதற்கான சரியான தரவுகளை கொடுக்க வேண்டும்.
எனவே 87 ஆயிரம் பேர் என்று நாங்கள் இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா.
அப்படியென்றால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி இவ்வளவு காலமும் அந்த 87 ஆயிரம் பேருக்கு எவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தார்கள் என்ற கேள்வி இருக்கின்றது.
இரண்டாவது விடையம் நான் பார்த்த அளவிலே யுத்தம் நிறைவடைந்ததுக்கு பிறகு அந்த மக்கள் வாழ்கையிலே விரத்தியுற்றவர்களாக, வாழவேன்டும் என்ற ஒரு பிடிப்பு இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்.
எனவே அவர்களுக்கு முதலாவதாக உளவியல் சார்ந்த ஒரு ஆலேசனைகளை அல்லது வழிகாட்டல்களை வாழ வேண்டும் என்ற பிடிப்பை நாங்கள் அவர்களுக்கு கொடுக்க வேன்டும்.
இரண்டாவதாக இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கை, கால்கள் ஊனமானவர்களுக்கு அல்லது இழந்தவர்களுக்கு சர்வதேச ரீதியிலே நாங்கள் அவர்களுக்கான செயற்கை கை, கால் வசதிகளை பெற்றுக்கொடுக்க வேன்டும்.
அவர்களுக்கு வாழ வேன்டும் என்ற ஒரு நம்பிக்கையை கொடுக்காவேண்டும். இன்னும் பலருக்கு இருக்கக் கூடிய பிரச்சினை சொந்த காணி இல்லாமல் வீட்டு திட்டங்களை பெற முடியாமல் இருக்கின்றார்கள்.
எனவே உங்களுக்கு தெரியும் சாதாரணமாக குழந்தைகளோடு வாழ்கின்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலிலே, வடக்கிலே கிழக்கிலே தமிழர் வாழுகின்ற இடங்களிலே குழந்தைகள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
பொண்களுக்கு எதிரான வண்முறைகள் இடம்பெறுகின்றது இது எல்லாத்துக்கும் தேவையான ஒரு விடயம் என்னவென்றால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இருப்பிடம் இல்லாமல் இருக்கின்றது.
இது சம்பந்தமாக அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்தார்களா இல்லையா என்பது தெரியாது.
ஆனால் என்னை பொறுத்த வரையில் என்னுடைய அரசியல் பயனத்துக்கு அப்பால் அதற்கான ஒரு தேடலுக்கு ஒரு முடிவை கொடுக்கவேண்டும் என்ற ஒரு திண்னம் இருக்கின்றது.
அது தொடர்பாக சஜித் பிரேமதாச வர்களும் தகுந்த ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றார். ஏன் என்றால் உங்களுக்கு தெரியும் அவருடைய தந்தையார் தொடர்ச்சியாக ஏழை மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தவர் எனவே அவர் விட்டுச் சென்ற பணியை சஜித் பிரேமதாச அவர்களும் தொடர்ந்தும் முன்னெடுத்தார்.
எனவே ஆட்சியில் இருக்கின்றோமே இலௌலையோ என்பதுக்கு அப்பால் தொடர்ச்சியான இந்த மக்களுக்கு பிரச்சினைகளுக்கான தீர்வை கொடுப்போம் என்று நம்பிக்கை இருக்கின்றது.
எனவே 87 ஆயிரம் என்பதை தயவு செய்து மீளவும் நீங்கள் சரிபார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை