தபால்மூலமான வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டது
2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூலமான வாக்களிப்பு திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூலமான வாக்களிப்பு ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஜூலை 16 மற்றும் 17 திகதிகளில் மதியம் 12 மணி வரை மாவட்ட செயலாளர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் வாக்களிக்க முடியும்.
குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு மேலதிகமாக ஜூலை 20 மற்றும் 21ஆம் திகதிகளிலும் வாக்களிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை