தனிமைப்படுத்தலில் 4,126 பேர் தொடர்ந்தும் உள்ளனர் – இராணுவம்

நாடுமுழுவதும் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் இன்று (புதன்கிழமை) வீடுதிரும்பியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 14,391 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு இதுவரை வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் முப்படையினரால் இயக்கப்படும் 40 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 4,126 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.