தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து வருகை தந்துள்ள குறித்த இலங்கையர்கள் 51 பேருடன் 2 சிறுவர்களும் வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாடு திரும்பிய அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை