மாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படும் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்துமாறு அறிவிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பிரத்தியேக வகுப்புக்கள், தனியார் வகுப்புகள் உள்ளிட்ட மாணவர்களை ஒன்றுதிரட்டி வகுப்புக்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து வகுப்புக்களையும் உடனடியாக நிறுத்துமாறு திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்தல் வழங்கியுள்ளது.
குறித்து அறிவித்தலை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அச்சம் படிப்படியாக குறைந்துவருவதோடு, பொது மக்கள் இயல்பு வழ்க்கைக்குத் திரும்பிவருகின்றனர்.
அந்தவகையில், இம்மாதம் 29ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புக்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை