ட்ரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்!
ட்ரோன் கமராவின் உதவியுடன் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு கஞ்சா தோட்டம் அழிக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை கிடைத்த தகவலின் மொனராகலை மாவட்டத்தில் தனமன்வில அடர்ந்த காட்டுப்பகுதிகளான மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் இரு கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டன.
குறித்த சுற்றி வளைப்பினை மொனராகலை, அம்பாறை , பண்டாரவளை ,மதுவரி திணைக்களத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 பேர் கொண்ட குழு ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த பாரிய அளவிலான கஞ்சா சேனை ட்ரோன் கமரா உதவியுடன் கண்காணிப்பு செய்யப்பட்டு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் 3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
மற்றும் அருகில் இருந்த இரு வேறு இடங்களில் இருந்த மற்றைய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதுடன் தப்பி சென்றவர்களால் பயிரிப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கஞ்சா செடிகள் பிடுங்கப்பட்டு தீ இட்டு அழிக்கப்பட்டது. சுமார் 2 ஏக்கருக்கு அதிகமான ஐந்து கஞ்சா சேனைகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை